ADVERTISEMENT

வன்முறையை தூண்டுகிறார் சூர்யா- ஹெச். ராஜா கண்டனம்

10:57 AM Jul 15, 2019 | santhoshkumar

சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. இது, இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 3-வது மொழி இந்தி இல்லை, அவரவர் விருப்பப்படி மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இந்த எதிர்ப்புக்கு பின்னர் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்து தெரிவிக்க வேண்டிய காலகட்டத்தை ஒரு மாதம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த அறிக்கை வெளியானபோதே நடிகர் சூர்யா ட்விட்டரில் அனைவரும் இதுகுறித்து பேச வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அகரம் அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய தேசியக் கல்வி கொள்கைக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அன்றிலிருந்து பலரும் சமூக வலைதளத்தில் சூர்யாவுக்கு ஆதரவாகவும், புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா மதுரை உசிலம்பட்டியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசியவர். புதிய தேசியக் கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT