தமிழ்சினிமாவின்முன்னணி நடிகரானசூர்யா இயக்குநர் தா.செ.ஞானவேல்இயக்கத்தில் 'ஜெய்பீம்' படத்தில் நடித்துள்ளார்.ரஜிஷாவிஜயன், மணிகண்டன்,லியோமோல்ஜோஸ்ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். '2டிஎண்டர்டைன்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்குஷான்ரோல்டன்இசையமைத்திருக்கிறார். பழங்குடி இன மக்களுக்குக் குரல் கொடுக்கும்வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார்.உண்மை நிகழ்வைஅடிப்படியாகக்கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பிலிருந்து நல்ல விமர்சனங்களை இப்படம் பெற்றுள்ளது. இத்திரைப்படம்தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில், பாஜக நிர்வாகியானஹெச்.ராஜா இந்த திரைப்படம் குறித்து அவரது டிவிட்டர்பக்கத்தில், 'நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம்.சுயநலமிகளைபுரிந்து கொள்வோம்' என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில்ஹெச்.ராஜாவுக்கு நடிகர் சூர்யா தனது பாணியில் பதில்கொடுக்கும்வகையில்ஹெச்.ராஜாவின் டிவிட்டர்பதிவை லைக் செய்துள்ளார். அதுதொடர்பானஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.