ADVERTISEMENT

"அரசியல் ரீதியாக பேசப்பட வேண்டிய கதைக்களம் இது" - பட பூஜையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேச்சு!

06:27 PM Dec 02, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேச்சிலர்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், தன்னுடைய அடுத்த படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். ரெபெல் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்குகிறார். ஸ்டூடியோ க்ரீன் மற்றும் திருக்குமரன் எண்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

படத்தின் பூஜை விழாவில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், "ஞானவேல் சார் என்னுடைய கேரியரில் மிக முக்கியமானவர். வசந்த பாலன் சார் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். என்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தி எனக்கென்று ஒரு பிசினஸ் வேல்யூ, மார்க்கெட் ஷேர் உருவாக்கி அடுத்த கட்டத்திற்கு என்னை அழைத்துச் சென்றது ஞானவேல் சார்தான். 2015இல் தொடங்கி இன்றுவரை நடிகராக நான் பயணிப்பதற்கு அவர்தான் காரணம். அவருடன் இணைந்து மீண்டும் படம் பண்ணுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருடன் இணைந்து இசை, நடிப்பு என நான் பண்ணிய அனைத்து படங்களுமே ஹிட் படங்கள். அந்த வரிசையில் இந்தப் படமும் சேரும் என நம்புகிறேன். இயக்குநர் நிகேஷ் முதல் தடவை கதை சொல்லும்போது ரொம்பவும் பிடித்திருந்தது. இது அரசியல் ரீதியாக பேசப்பட வேண்டிய கதைக்களம். சில கதைகள் கேட்கும்போதே இந்தக் கதைகள் நிச்சயம் சொல்லப்பட வேண்டும் என்று நமக்குத் தோன்றும். அப்படி ஒரு கதையாக ரெபெல் கதை இருந்தது. அதை சரியாக செய்வோம் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT