GV Prakash in the investigative horror genre; First look released by the film crew

Advertisment

'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் 'ஐங்கரன்'. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். 'காமன்மேன்' நிறுவனம் சார்பாக பி.கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பின்பு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு '13' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. புலனாய்வு திகில் பட ஜானரில் உருவாகிவரும் இந்த படத்தில் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'மெட்ராஸ் ஸ்டுடியோஸ்' தயாரிக்கும் இப்படத்தை விவேக் இயக்குகிறார். சித்துகுமார் இசையமைக்கிறார். படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருதாக படக்குழு தெரிவித்துள்ளது.