ADVERTISEMENT

“என் இசையில் தனுஷ் பாடிய அனைத்தும் ஹிட் ஆனால்...”- ஜிவி பிரகாஷ் ட்வீட்!

03:22 PM Jun 13, 2020 | santhoshkumar

ADVERTISEMENT


'வெயில்' படத்தில் தொடங்கி ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருந்தபோது நடிப்பில் மிகவும் ஆர்வமாகி தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

ADVERTISEMENT


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவான 'அசுரன்' படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை இசையமைப்பாளராகத் தொடங்கியுள்ளார் ஜி.வி. என்றே சொல்லலாம். இந்தப் படத்தைத் தொடர்ந்து, சூரரைப்போற்று, வெற்றிமாறன் - சூர்யா படம் என்று லிஸ்ட் ஏறிக்கொண்டே செல்கிறது.

இதனிடையே நடிகனாகவும் அதே படத்தில் இசையமைப்பாளராகவும் ஜிவி பணியாற்றிய படம் 'ஜெயில்'. வசந்த பாலன் இயக்கும் இப்படம் கடந்த ஒரு வருடமாக ரிலீஸுக்காகக் காத்திருக்கிறது. லாக்டவுன் முடிந்து திரையரங்கம் திறக்கும்போது ஜெயில் படம் முதல் படமாக ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இருவரும் இணைந்து ஒரு பாடலைப் பாடியிருக்கின்றனர் என்று முன்னமே ஜி.வி. தெரிவித்த நிலையில் ஜி.வியின் பிறந்தநாளான இன்று 'ஜெயில்' படம் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனுஷ், அதிதி இருவரும் இணைந்து பாடிய காத்தோடு காத்தானேன் என்ற பாடல் வருகிற 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜி.வி. இதுகுறித்து தெரிவிக்கையில், “தனுஷ் என்னுடைய இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவை அனைத்தும் ஹிட் அடித்துள்ளது. ஆனால், இது எங்கள் இருவரின் பணியில் மிகச் சிறந்ததாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT