ADVERTISEMENT

விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

03:46 PM Jun 16, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வருகிற படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். 'இன்ஃபினிட்டி ஃபிலிம்' நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. இதனைப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம், கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார் - விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாக உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT