/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/saleem.jpg)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'கோடியில் ஒருவன்' திரைப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைபெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் எழுதி, இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படம்கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார், விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாகதயாராகிவருகிறது.
'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'சலீம்' முதல் பாகத்தின்தொடர்ச்சியாக இப்படம் உருவாகிவருவதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். இன்ஃபினிட்டிவ் பிலிம் வென்ச்சர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாகவே தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், படத்தை அடுத்த ஆண்டு திரைக்கு கொண்டுவரபடக்குழு திட்டமிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)