/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vv_19.jpg)
இயக்குநர் விஜய் மில்டன் எழுதி, இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துவருகிறார். இப்படம், கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார் -விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாகதயாராகிவருகிறது. ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். ‘சலீம்’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் எடுக்கப்படுகிறது. இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார்.இன்ஃபினிட்டிவ் ஃபிலிம் நிறுவனம்தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் குறித்ததகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகரும்தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாகபடக்குழு நடிகர் விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தஅதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.
விஜயகாந்த் கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு சுரேந்திரன் கலியபெருமாள் இயக்கத்தில், தனது மகன் நடிப்பில் வெளியான‘சகாப்தம்’ படத்தில்கௌரவ வேடத்தில் நடித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)