/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/131_7.jpg)
இயக்குநர் விஜய் மில்டன் எழுதி, இயக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துவருகிறார். இப்படம், கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார் -விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாகதயாராகி வருகிறது. ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். ‘சலீம்’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் எடுக்கப்படுகிறது. இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார்.இன்ஃபினிட்டிஃபிலிம் நிறுவனம்தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதில், விஜய் ஆண்டனி மழையில் நனைந்தவாறு கையில் உள்ளநாய் குட்டியைநனையாதவாறுமறைத்து எடுத்து செல்வதுபோல உள்ளது. விஜய் ஆண்டனி தலையில் கேப்புடன்ஸ்டைலாகஇருக்கும் அந்த டைட்டில் லுக்போஸ்டர் பலரையும் கவர்ந்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)