ADVERTISEMENT

"டான் படம் மூலம் இரண்டு சக்கரவர்த்திக்கு சிவகார்த்திகேயன் வாழ்க்கை கொடுத்துள்ளார்" - டான் இயக்குநர் பேச்சு

04:12 PM May 07, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் சிபி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேசுகையில், "இந்த தருணம் நான் பல வருடங்களாக காத்திருந்த ஒன்று. எனது கனவுகளை நனவாக்க பெரும் உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கு நன்றி. இவ்வளவு பெரிய நட்சத்திர நடிகர்களைக் கையாளும் அளவிற்கு என்னை தகுதி உடையவனாக மாற்றிய என் குருநாதர் அட்லீக்கு நன்றி. அவர் வழிகாட்டியாக இருந்து, எனக்கு பல அனுபவங்களை கற்று தந்தார். சிவகார்த்திகேயன் சாரின் ஒரு போன் கால், என் வாழ்க்கையை மாற்றியது. எஸ்.கே.வின் வெற்றி என்னைப் போன்ற பலருக்கு உத்வேகம் அளித்துள்ளது. அவரது திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்ற போதிலும், அவர் எப்போதும் பணிவுடன் இருப்பார். படம் தொடங்கிய காலத்திலிருந்தே, கரோனா பிரச்சனைகள் உட்பட பல சவால்கள் இருந்தன.

ஆனால் அந்த நேரத்திலும் அவர் படம் சிறப்பாக உருவாவதற்கான அறிவுரைகளை கொடுத்துக்கொண்டே இருப்பார். டான் படத்தில், படத்தில் இருக்கும் சக்கரவர்த்தி, படம் எடுத்த சக்கரவர்த்தி என இருவருக்கு சிவா சார் வாழ்க்கை கொடுத்துள்ளார். அனிருத் சார் ஒரு பாசிட்டிவிட்டி நிறைந்த மனிதர், அதை எங்கள் முதல் சந்திப்பிலேயே என்னால் உணர முடிந்தது. எஸ்.ஜே.சூர்யாவும், சமுத்திரக்கனியும் இந்தப் படத்தின் தூண்கள். பிரியங்கா அருள் மோகன் ஒரு நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள கலைஞர். பெரும் உழைப்பை வழங்கிய ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் நன்றி. டான் திரைப்படம் பார்வையாளர்கள் அனைவருக்கும் வேடிக்கையான மற்றும் அழகான பொழுதுபோக்கு நிறைந்த படமாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT