/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-16_2.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவானசிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பிறகு தற்போது முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டான்' படம் 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிவருகிறது. இதனிடையே ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள 'அயலான்' படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'எஸ்.கே 20' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா கதாநாயகியாக நடிக்கிறார். 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக தற்போது மிஷ்கின் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மிஷ்கின் சமீபத்தில் ஊடகத்தில் பேசும் பொழுது இதனை உறுதி செய்துள்ளார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன், 'ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் 'எஸ்.கே 21' படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)