/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_320.jpg)
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்புகள் அனைத்தையும்நிறைவுசெய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது.சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தயில்நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது .
இதனிடையே, அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகிவருகிறது. கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படமும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் விஜய் சேதுபதி படத்துடன் சிவகார்த்திகேயன் படம் மூன்றாவது முறையாக ஒரே நாளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்களான ‘எதிர்நீச்சல்’ - ‘சூதுகவ்வும்’, ‘ரெமோ’ - ‘றெக்க’ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியான நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ - ‘டான்’ படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)