vdasgsads

'கோலமாவு கோகிலா' புகழ் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கில் வெற்றிபெற்ற ‘கேங்ஸ்டர்’ பட நாயகி பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர்.

Advertisment

alt="vdsgbd" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="ee32ed49-f8c1-4162-ade0-017fcaf4821b" height="354" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_24.jpg" width="590" />

யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கியக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘டாக்டர்’ படத்தின் டப்பிங் பணிகளைத் தான் முடித்துவிட்டதாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் சமூகவலைதளத்தில் அறிவித்தார்.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதன்படி வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி 'டாக்டர்' படம் திரையரங்குகளில் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

alt="dgdzv" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="31374426-8c3c-40ac-873a-e02b218af7b6" height="368" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Trip-Article-inside-ad-500x300.jpg" width="613" />