ADVERTISEMENT

விஜய் பட இயக்குநர் காலமானார்

01:29 PM Dec 28, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் ஆச்சார்யா ரவி மாரடைப்பால் காலமானார். இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரவி, விக்னேஷ் நடிப்பில் வெளியான 'ஆச்சார்யா' படத்தை இயக்கியதன் மூலம் ஆச்சார்யா ரவி என்று அழைக்கப்பட்டார். இவர் 'டம்மி பட்டாசு', 'அனைத்துக்கும் ஆசைப்படு' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் இயக்குநர் ஆச்சார்யா ரவி சிகிச்சை பலனின்றி இன்று(28.12.2021) காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஆச்சார்யா ரவியின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT