நடிகர் விஜய் தற்போது அட்யின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து பணி புரிகிறார். தளபதி 63 என்று குறிப்பிடப்படும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த வருட தீபாவளி பண்டிகையில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. மேலும் இந்த படத்தின் பல ஃபோட்டோக்கள் வெளியாகி படக்குழுவுக்கு பல அதிர்ச்சிகளை தந்துவருகிறது.
படத்திற்கு என்ன பெயர் இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஃபஸ்ட் லுக் எப்போது வரும் என்றும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார். இப்பட வேலைகள் நடந்துவரும் நிலையில் விஜய்யின் 64வது படம் குறித்து ஒரு தகவல் பரவுகிறது.
மாநகரம் என்ற முதல் படத்தின் இயக்கத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இளம் இயக்குனரான இவருடைய முதல் படத்தை பார்த்து தானாகவே கால் ஷீட் கொடுத்து படம் இயக்க செய்தார் நடிகர் கார்த்தி. கைதி என்ற பெயரில் உருவான இப்படத்தின் ஷூட்டிங் வெகு குறைந்த நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது இறுதிகட்ட வேலைகளில் உள்ளது இப்படக்குழு.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் விஜயின் அடுத்தப் படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்று பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறதாம். அப்போது விஜய் லோகேஷ் கனகராஜை அழைத்து பேசினாராம். விஜய் நடிக்கப்போகும் அடுத்த படத்தை எடுக்க இருக்கும் இயக்குனர்கள் லிஸ்டில் தற்போது லோகேஷும் சேர்க்கப்பட்டிருக்கிறார். சினிமா வட்டாரங்களில் லோகேஷ்தான் அடுத்து விஜயை வைத்து இயக்குவார். இதுகுறித்தான அதிகாரப்பூர்வ செய்திகள் தளபதி 63 பட வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியவுடன் வெளியாகும் என்று சொல்கின்றனர். இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது. ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.