ADVERTISEMENT

“அங்கிள்... உங்களை நாங்கள் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம்...”- வருத்தப்பட்ட தனுஷ்

10:24 AM Feb 26, 2020 | santhoshkumar

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்யப்போவதாக வெளியான தகவலை அடுத்து இயக்குனர் விசு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதில், “ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக எனக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. அதில் அந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியிருப்பதாகவும் மேனகா நடித்த கதாபாத்திரத்தில் அவரது மகள் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் எனக்கு வந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் அந்த வீடியோவில், தனுஷ் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்றார். இதன்பின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம், நாங்கள் யாருக்கும் நெற்றிக்கண் படத்தின் ரீமேக் உரிமைத்தை விற்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டது.

அதனை தொடர்ந்து விசு புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் தனுஷ் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடர்புக்கொண்டது குறித்து தெரிவித்துள்ளார். அதில், “என்னுடைய பேட்டி வெளியான 2 நாட்களுக்குப் பின் தனுஷ், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். ‘அங்கிள்.. உங்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியாது. எங்களது இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ஏனென்றால் எங்க அப்பா 1982ல் இருந்து உங்களிடம் உதவி இயக்குனராக வேலை செய்தார். பல படங்களில் வேலை செய்திருக்கிறார்’ என்று பேசினார்.

பின்பு ‘அங்கிள்... உங்களுக்கு வந்த செய்தி உண்மையான செய்தி அல்ல. பத்திரிகை நிருபர் ஒருவர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தால், அது எந்தப் படம் என்று கேட்டார். அதற்கு 'நெற்றிக்கண்' என்று பதிலளித்தேன். அது எனக்கு ரொம்பப் பிடித்த படம்’ என்று சொன்னேன். அவ்வளவுதான்.

நான் அந்தப் படத்தின் உரிமையை யாரிடமும் வாங்கவில்லை. யாரிடமும் பேசவும் இல்லை. அதன் முதற்கட்டப் பணிகளையும் தொடங்கவில்லை. வந்தது தவறான தகவல்’ என்று சொன்னார். முன்னதாக கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவும் தொலைபேசி வாயிலாக கீர்த்தி சுரேஷை 'நெற்றிக்கண்' ரீமேக்கில் நடிக்க யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறினார்” என்று கூறியிருந்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT