
'காதல் கொண்டேன்'படத்தின் மூலம் அறிமுகமான, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், கடைசியாக வெளியான படம் 'என்.ஜி.கே.' இப்படம், விமர்சன ரீதியாகவும்,வணிகரீதியாகவும் கடும் பின்னடைவைச் சந்தித்தது. அதன்பின் நடந்த ஒரு விழா மேடையில், 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இருப்பதாக செல்வராகவன் மற்றும் தனுஷ் தெரிவித்தனர். இதனையடுத்து உற்சாகமான ரசிகர்கள், இது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், நடிகர்தனுஷ் ட்விட்டர் பதிவு ஒன்றைவெளியிட்டுள்ளார்.அதில், எங்கே தொடங்கினேனோ அங்கேயே(அதேசெல்வராகவன் + யுவன் சங்கர் ராஜாகூட்டனியில்)நான். நான் இங்கே இருப்பதற்குக் காரணமானதயாரிப்பளார், என்னுடைய படைப்பாளி,சகோதரர் செல்வராகவனுடன் இணைந்தது மகிழ்ச்சி.இந்த தடவையாவது அவரை இம்ப்ரஸ் பண்ணுவேன்னு நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)