'பொல்லாதவன்', 'ஆடுகளம்'... சமீபத்தில் 'வடசென்னை' என தரமான வெற்றிப்படங்களைக் கொடுத்த கூட்டணியான தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியின் அடுத்த படம் 'அசுரன்'. 'கலைப்புலி' தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷின் தோற்றம் வித்தியாசமாக மிரட்டலாக இருந்தது. இது ஒரு பீரியட் படம் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தில் 'சாமுராய்', 'காதல்', 'கல்லூரி', 'வழக்கு எண் 18/9' போன்ற மிகச்சிறந்த படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் நடிக்கிறார். இந்தப் படத்திற்காக அவர் பெரிய மீசையுடன் இருக்கும் புதிய தோற்றத்தில் சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார். தனுஷுக்கு வில்லனாக இவர் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவர் நடிப்பதை உறுதி செய்த படக்குழு, இவரது பாத்திரம் குறித்து எதுவும் கூறவில்லை. பாலாஜி சக்திவேல் மிகவும் மென்மையான குணம் கொண்டவர். இவரது படங்கள் சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசுபவை. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமான 'காதல்'லில் முதலில் தனுஷை நடிக்கவைக்க முயற்சி நடந்தது. அப்போது அது அமையவில்லை. இப்போது தனுஷ் நடிக்கும் படத்தில் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார்.