Skip to main content

''என்னுடன் மகேஷ் பாபு நடிக்கிறாரா...?'' - சிரஞ்சீவி விளக்கம்!

Published on 13/04/2020 | Edited on 13/04/2020


ராம் சரண் தயாரிப்பில் உருவான சைரா நரசிம்மா ரெட்டி படத்திற்குப் பிறகு நடிகர் சிரஞ்சீவி மீண்டும் அவரது மகன் ராம் சரண் தயாரிக்கும் 'ஆச்சர்யா' படத்தில் நடித்து வருகிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தம் ஆன நிலையில் அவர் திடீரென இப்படத்திலுருந்து விலக அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கவுள்ளார். மணிசர்மா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தில் முக்கியக் கதாபத்திரத்தில் மகேஷ் பாபு நடிப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகின. 

 

qd

 

இந்நிலையில் இதுகுறித்து தற்போது சிரஞ்சீவி விளக்கமளித்துள்ளார். அதில்..."இதுபோன்ற செய்திகளெல்லாம் எங்கிருந்து வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே கொரட்டாலா சிவா, ராம் சரணை படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். நாங்கள் மகேஷ் பாபு பற்றிச் சிந்திக்கவே இல்லை. ராஜமௌலியிடம் கோரிக்கை வைத்து ராம் சரணை ஒரு மாதம் எங்கள் படப்பிடிப்புக்காக அனுப்பச் சொன்னோம். அவரும் ஒப்புக்கொண்டு சரணை அனுப்பிவைத்தார். நானும் சரணும் அப்பா, மகன் கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. ஒரு குரு, சிஷ்யன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறோம்'' என விளக்கமளித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்காவில் ஒலித்த தென்னிந்திய பட பாடல்

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
mahesh babu sree leela Kurchi Madatha Petti song played at NBA half time in US

மகேஷ் பாபு, ஸ்ரீ லீலா நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குண்டூர் காரம். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ். ராதா கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சங்கராந்தி விழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி இப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.170 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே படத்தில் இடம்பெற்ற   ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பாடலில் இடம் பெற்ற நடனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. யூ-ட்யூபில் தற்போது வரை 158 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது. 

mahesh babu sree leela Kurchi Madatha Petti song played at NBA half time in US

இந்த நிலையில் இப்பாடல் அமெரிக்கா வரை பரவியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில், கூடைப்பந்து விளையாட்டின் போது, மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் அதில் நடனமாடிய கலைஞர்கள், ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடலுக்கும் நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

Next Story

18 வருடம் கழித்து மீண்டும் முன்னணி நடிகருக்கு ஜோடியான த்ரிஷா

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
trisha joined in chiranjeevi Vishwambhara

த்ரிஷா தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் ஐடென்டிட்டி, மோகன்லாலின் 'ராம் பார்ட் 1' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படி தொடர்ந்து தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் 156வது படத்தில் இணைந்துள்ளார். வசிஷ்டா இயக்கும் 'விஷ்வாம்பரா' படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார். யுவி க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த பொங்கலன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அடுத்த வருடம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இப்படம் மூலம் 18 வருடங்கள் கழித்து மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட த்ரிஷா, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு ஸ்டாலின் படத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் சிரஞ்சீவி, த்ரிஷாவிற்கு ஆதரவாக மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.