ADVERTISEMENT

'வெங்கட் பிரபு, பா.ரஞ்சித்...' - ஆந்தாலஜி படத்தின் ட்ரைலர், ரிலீஸ் தேதி வெளியீடு

01:10 PM Jul 19, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி' மற்றும் 'பிளாக் டிக்கெட் நிறுவனம்' இணைந்து தயாரித்துள்ள ஆந்தாலஜி படம் 'விக்டிம்'. நான்கு கதைகளை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு (கன்ஃபெஷன்), பா.ரஞ்சித் (தம்மம்), சிம்புதேவன் (கொட்டை பாக்கு வத்தலும், மொட்டை மாடி சித்தரும்), ராஜேஷ்.எம் (மிராஜ்), ஆகியோர் இயக்கியுள்ளனர். இப்படத்தில் பிரசன்னா, அமலா பால், தம்பி ராமையா, நட்ராஜ் (நட்டி), பிரியா பவானி ஷங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி எஸ், பிரேம்ஜி, கணேஷ் சேகர், தென்மா உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் அறிவிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'விக்டிம்' படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. நான்கு கதைகளில், நான்கு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை, ஃபேண்டஸி, த்ரில்லர், ஆக்ஷன் உள்ளிட்ட ஜானரில் கலந்து சொல்லியிருப்பது போல் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ட்ரைலரையும் பகிர்ந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT