/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ran-im_0.jpg)
கரோனாதொற்று பாதிப்பால் திரைப்படங்களின் படப்பிடிப்பு பணிகள்பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகளுக்கு, அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் படப்பிடிப்பு பணிகள்முழுவீச்சில் நடைபெறவில்லை. திரையரங்குகளும் இனிதான் திறக்கப்படவுள்ளன. இதனால்தமிழ் சினிமா இயக்குனர்கள், தற்போது ஆந்தாலஜிபடங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைவானநடிகர்கள் மற்றும் படக்குழு, குறுகியகாலபடப்பிடிப்பு எனகரோனாதொற்றுகாலத்திற்கு ஏற்றதாக இருப்பதால் பலரும் ஆந்தாலஜி படங்களைஎடுக்க தொடங்கியுள்ளனர். சமீபத்தில், கெளதம்மேனன், சுஹாசினி மணிரத்தினம், கார்த்திக்சுப்புராஜ், சுதாகொங்கரா, ராஜீவ்மேனன் ஆகியோர்இணைந்து இயக்கிய'புத்தம் புது காலை" ஆந்தாலஜி வெளியாகி வரவேற்பைபெற்றது. அடுத்ததாக, இயக்குனர் மணிரத்தினம்ஒரு ஆந்தாலஜியை தயாரிக்கிறார். அதில்சூர்யா, விஜய்சேதுபதி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ்உள்ளிட்ட முன்னணி நடிகர்நடிகைகள்நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான், இமான்முன்னணி இசையைப்பாளர்கள்இசையமைக்கின்னர்.கௌதம்மேனன், கார்த்திக்நரேன்உள்ளிட்டோர் இயக்கவுள்ளனர். நடிகர் அரவிந்த்சாமியும்ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த ஆந்தாலஜியை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட்பிரபுவும்ஆந்தாலஜி ஒன்றை தயாரிக்கவுள்ளார்.
இந்த ஆந்தாலஜியை வெங்கட் பிரபுவோடு இணைந்து பா.ரஞ்சித், ராஜேஷ்சிம்புதேவன் ஆகியோர் இயக்கவுள்ளனர். இப்படத்திற்கு 'திவிக்டிம்' எனபெயரிடப்பட்டுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிவகார்த்திகேயன்,தனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அந்தாலஜிஹாட்ஸ்டாரில் வெளியாகும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)