/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/444_39.jpg)
'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு ‘மன்மதலீலை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அசோக்செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரேம் ஜி இசையமைத்துள்ளார். ரொமான்டிக்ட்ராமாபடமாக உருவாகியுள்ள இப்பம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாககூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கவுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம்பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இயக்குநர்வெங்கட் பிரபு ஏற்கனவே இப்படத்தின் பணிகளை தொடங்கி விட்டதாகவும், விரைவில் இது குறித்தஅறிவிப்புவெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)