
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித் கடைசியாக 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கியிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இயக்குநராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் பயணித்து வரும் ரஞ்சித் இன்று(08.12.2022) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி திரைப்பிரபலங்கள், படக்குழு மற்றும் ரசிகர்கள் பலரும் ரஞ்சித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'தங்கலான்' படக்குழு ரஞ்சித்திற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் இப்படத்திற்காக விக்ரம் மேக்கப் போடும் சில காட்சிகள் வந்து போகின்றன. மேலும், அந்தப் பதிவில், "இணையற்ற கதைகள் மற்றும் அற்புதமான திரைப்படங்களை உருவாக்கியவருக்கு 'தங்கலான்' படக்குழுவின் வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஏற்கனவே இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி விக்ரமின் கெட்டப் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. 'தங்கலான்' என்பது ஊர்க்காவலன் எனப் பொருள்படும் என்று கூறப்படும் நிலையில், கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
A small tribute to the creator of unparalleled stories and groundbreaking flicks. Birthday wishes to Our Beloved #PaRanjith sir from team #Thangalaan
🔗https://t.co/P86D8HTZ6X#HappyBirthdayPaRanjith #HBDPaRanjith #ChiyaanVikram @chiyaan @beemji @StudioGreen2 @officialneelam pic.twitter.com/kOhLAkapeU— Studio Green (@StudioGreen2) December 8, 2022