ADVERTISEMENT

காதலியை கரம் பிடித்த புகழுக்கு திரைபிரபலங்கள் வாழ்த்து

04:03 PM Sep 02, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சின்னத்திரையின் மூலம் பிரபலமான புகழ் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை நேற்று மணந்தார். இவர்களின் திருமணம் திண்டிவனம் அருகேயுள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர் சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் சமூக வலைத்தளத்தில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் புகழ், தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். புகழின் பதிவை இயக்குநர் சீனுராமசாமி மற்றும் சசிகுமார் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குனர் சசிகுமார், தான் நேரில் சென்று வாழ்த்திய புகைப்படங்களை பகிர்ந்து, "அன்பு தம்பி புகழ். பென்சி இருவரும் இணைந்த இந்த சிறந்த நாளில் என்றும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்க வாழ்த்துகின்றேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பின்பு வாழ்த்து தெரிவித்த சீனுராமசாமி மற்றும் சசிகுமாரின் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் புகழ். இதனிடையே 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்', 'யானை' உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடத்தில் நடித்துவந்த புகழ் தற்போது ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT