தமிழ்ப்பட நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு இன்று (05/02/2020) காலை திடீரென திருமணம் நடைபெற்றுள்ளது.
திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் யோகி பாபு. திருமணம் குறித்து வெளிப்படையாக அறிவிப்பேன் என மேடைகளில் பேசிய நிலையில் யோகி பாபு திடீர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமண நிகழ்வில் அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் யோகி பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது.
இதையடுத்து நடிகர் யோகி பாபுக்கு திரையுலகினர் பலரும் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலமாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.