Published on 21/08/2020 | Edited on 21/08/2020

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தர ராஜா. பல படங்களில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் கவனிக்கதக்க நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சௌந்தர ராஜா இயக்குனர் சீனு ராமசாமி தன்னிடம் கதை சொன்னது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"அதிகாலையில் சீனு ராமசாமி அண்ணாவிடம் கதையைக் கேட்டேன். அவர் சொன்ன கதை என் கண்களுக்கு முன்னால் ஒரு ஆரோக்கியமான திரைப்படத்தை பார்ப்பது போல் உணர்ந்தேன். என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதை நான் உணரவில்லை. அற்புதமான அதிகாலை. நன்றி, அண்ணா" என கூறியுள்ளார்.