ADVERTISEMENT

"ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி"...  வெளியானது பீஸ்ட் படத்தின் ஹலமத்தி ஹபீபோ

06:02 PM Feb 14, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. வித்தியாசமான நகைச்சுவை கலந்த இந்த ப்ரோமோ வீடியோ 17 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ள நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். விஜய்க்கே உரித்தான ஸ்டைலிஷான லுக் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT