/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/best.jpg)
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
முதற்கட்ட படப்பிடிப்பைசென்னையில் நிறைவுசெய்த படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றது. அங்கு ‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அதன் பிறகு சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில்நடைபெற்றுவந்த படப்பிடிப்புஅனைத்தும் சமீபத்தில் நிறைவடைந்ததாகபடக்குழு கூறியது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், படத்தின் முதல்பாடல் குறித்ததகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மாத இறுதியில் 'பீஸ்ட்' படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாகவும், இப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)