/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/109_11.jpg)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி பான் இந்தியத்திரைப்படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அரபிக்குத்து ', விஜய் பாடிய 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய இரு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படம் ரிலீசாக சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் டீசரை விஜய் ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், 'பீஸ்ட்' படத்தின் டீசர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)