Beast success party vijay house

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'.இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்குமத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் விஜய் படக்குழுவினரைஅழைத்து தனது வீட்டில் சிறப்பு விருந்தளித்துள்ளார். இதற்கு தனது ட்விட்டர் பதிவின் மூலம் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ள நெல்சன், விருந்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அத்துடன் "அன்பிற்கு ஆதரவுக்கும் நன்றி விஜய் சார். உங்களின்வசீகர தன்மை தான் பீஸ்ட் படத்தை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத்தெரிவித்துள்ளார்.

Advertisment