ADVERTISEMENT

பாரதிராஜாவின் கண்! ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்!!

03:54 PM Jun 13, 2020 | santhoshkumar


தமிழ் திரையுலகின் பழம்பெரும் ஒளிப்பதிவாளரும், பாரதிராஜாவின் நெருங்கிய நண்பருமான கண்ணன் உடல்நல குறைவால் காலமானார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


பாரதிராஜாவின் நிழல்கள் படம் தொடங்கி, பொம்மலாட்டம் படம் வரை அவருக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் கண்ணன். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். அதில் 40 படங்கள் பாரதிராஜவுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். இதனால் பாரதிராஜாவின் கண்கள் இவர் என்றுகூட அழைப்பது உண்டு. இதை பாரதிராஜாவே ஒரு பேட்டியில் கண்ணன் குறித்து பேசுகையில் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது பலன் அளிக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று பிற்பகல் 2 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.


மறைந்த கண்ணனுடைய வயது 69. இவர் இயக்குனர் பீம்சிங்கின் மகன், முன்னணி எடிட்டரான லெனினின் சகோதரர் ஆவார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை (ஜூன் 14) அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT