ADVERTISEMENT

'இவர் ஆடுவாரா இல்ல ஆட்டி வைப்பாரா' - டான்சில் கலக்கும் 'அண்ணாச்சி'

11:49 AM May 20, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தை ஜே.டி - ஜெரி ஆகியோர் இயக்குகின்றனர். சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் 'மோசலோ மொசலு' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 'தி லெஜண்ட்' படத்தின் 'வாடிவாசல்' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. திருவிழா பின்னணியில் ஹீரோ அறிமுக பாடல் போல் வெளிவந்திருக்கும் இப்பாடலில் அருள் சரவணன் டான்சில் கலக்கியுள்ளார். பென்னி தயால் மற்றும் ஜோனிடா காந்தி பாடியுள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மே 29-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT