Skip to main content

'இந்த முறை நான் அடிக்கிற அடி மரண அடியாதான் இருக்கும்' - நம்பர் 1 இடத்தில் 'தி லெஜண்ட்'

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

arul saravanan's 'the legend' movie get no.1 in trending

 

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்குகின்றனர். சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 

 

இந்நிலையில் 'தி லெஜண்ட்' படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது. படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. பலரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் ஆக்ஷன், காமெடி, காதல், எமோஷன் கலந்து பக்காவான கமர்ஷியல் பாணியில் உள்ளது. யூட்யூப்-இல் வெளியான இந்த ட்ரைலர் தற்போது வரை 3.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வைப் மோடில் கீர்த்தி சுரேஷ் & கௌதம் மேனன்

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

heerthy suresh gautham menon vibe for ajith song in harris jayaraj concert

 

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் 'துருவ நட்சத்திரம்' மற்றும் எம். ராஜேஷ் மற்றும் ஜெயம் ரவியின் 'பிரதர்' உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதில் துருவ நட்சத்திரம் படம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பிரதர் படம் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

திரைப்படங்களைத் தாண்டி அவ்வப்போது இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஹாரிஸ் ஜெயராஜ், நேற்று சென்னையில் 'ராக் ஆன் ஹாரிஸ்' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை 'நாய்ஸ் அன்ட் க்ரைன்ஸ்' (Noise and Grains) என்ற நிறுவனம் மேற்கொண்டது. 

 

கடந்த மாதம் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில், ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டு பெரும் சர்ச்சையானதால் ஹாரிஸ் ஜெயராஜ் நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கப்பட்டது. இசை நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சரியான இருக்கைகள், பார்க்கிங் வசதி உள்ளிட்ட விஷயங்களை இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. 

 

சென்னையில் உள்ள நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். ரசிகர்களுடன் திரை பிரபலங்களாகிய கீர்த்தி சுரேஷ், கெளதம் மேனன், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கண்டு களித்தனர். அப்போது கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'அதாரு அதாரு...' பாடல் பாடப்பட்ட போது ரசிகர்களுடன் கீர்த்தி சுரேஷும், கெளதம் மேனனும் நடனமாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

 

Next Story

ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி; படையெடுக்கும் ரசிகர்கள் 

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Concert by Harris Jayaraj; Invading fans

 

நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நடத்தும் இசை நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

 

அண்மையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் நிகழ்ச்சியில் நிகழ்ந்த குளறுபடிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்குப் பல்வேறு நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கப்பட்டது. இசை நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சரியான இருக்கைகள், பார்க்கிங் வசதி உள்ளிட்ட விஷயங்களை இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூடுதலாக டிக்கெட் விற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை 'நாய்ஸ் அன்ட் க்ரைன்ஸ்' (Noise and Grains) என்ற நிறுவனம் செய்கிறது. இன்னும் சற்று நேரத்தில் இசை நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்கள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் குவிந்து வருகின்றனர். இதற்காக 5000 கார்கள், 10,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.