Skip to main content

ஓடிடி ரிலீஸ்: நான்கு மொழிகளில் 'தி லெஜெண்ட்'

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

the legend ott release update

 

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்கியிருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ. 45 கோடி வசூல் செய்தது.  

 

தி லெஜண்ட் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்ற இரு முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படும் நிலையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று மதியம் 12.30 மணி முதல் முதல் வெளியாகவுள்ளது. ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியில் வெளியாகவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மனிதர் உணர்ந்து கொள்ள...’ - மஞ்சும்மல் பாய்ஸின் ஓடிடி அப்டேட்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
manjummel boys ott update

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் முக்கியமான இடத்தில் பயன்படுத்தியிருந்தது. அது தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தை திரையிட திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது. 

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னை வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இதனிடையே கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். இதையடுத்து ரஜினி, தனுஷ், விக்ரம், சித்தார்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் இயக்குநர் சிதம்பரத்தை அழைத்து பாராட்டியிருந்தனர்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் இப்படம் பேசுபொருளாகவே மாறி, இப்படத்தின் தாக்கத்தினால் சுற்றுலா விரும்பிகள் பலரும் குணா குகையை நோக்கிப் படையெடுத்தனர். இதையடுத்து உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனை படைத்தது. இதையடுத்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு கடந்த 6ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. மே 5 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
hotstar new series uppu puli kaaran  first look released

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், அடுத்து வழங்கும் புதிய சீரிஸ், 'உப்பு புளி காரம்'. இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், இந்த சீரிஸ் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் எம் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் என்பவர் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இந்த சீரிஸ் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் சமீபத்திய வெளியீடுகளான ஹார்ட் பீட், மத்தகம் மற்றும் லேபிள் சீரிஸ்கள், வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.