ADVERTISEMENT

கடைசியாக ஒருமுறை எஸ்.பி.பி குரலில் ரஜினி... வெளியானது 'அண்ணாத்த' அறிமுகப்பாடல்!

06:21 PM Oct 04, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகிவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். கரோனா பரவல், ரஜினிகாந்த்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இப்படத்தைத் தீபாவளி தினமான நவம்பர் 4ஆம் தேதி திரைக்குக் கொண்டுவரும் முடிவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளது.

இந்த நிலையில், 'அண்ணாத்த... அண்ணாத்த...' என்ற படத்தின் அறிமுகப்பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கான வரிகளை விவேகா எழுத, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். பாடலின் தொடக்கத்திலேயே இசை மேதை எஸ்.பி.பி. ஐயா அவர்களுக்கு எங்கள் இசை வணக்கம் எனக் குறிப்பிட்டு இப்பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT