Advertisment

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்த், தனது வசீகர நடிப்பாலும், ஸ்டைலாலும் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தமிழ் மொழி ரசிகர்களைப் போலவே பிறமொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ரஜினிகாந்த், கடைசியாக இயக்குநர் சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். தீபாவளி அன்று வெளியான இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களையேபெற்றது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று (12.12.2021)தனது71வது பிறந்தநாளைக் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.