/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_31.jpg)
இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய சிலருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை திரும்பிய படக்குழு, சிறு இடைவெளிக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பு நடத்தியது. பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து நடத்தப்பட்ட படப்பிடிப்பில் முக்கியமான சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, எஞ்சியுள்ள காட்சிகளைப் படமாக்க படக்குழு சமீபத்தில் ஹைதராபாத் விரைந்தது.
அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாகநேற்று தகவல் வெளியான நிலையில், இன்று அவர் சென்னை திரும்பியுள்ளார். அடுத்த வாரத்தில் படத்தின் டப்பிங் பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபடவுள்ளதாகவும், அதை முடித்துவிட்டு அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)