Skip to main content

ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ‘அண்ணாத்த’ டீசர்!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

Annaatthe

 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகிவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். கரோனா பரவல், ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. 

 

ad

 

‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி தினத்தன்று திரைக்குவர உள்ள நிலையில், படத்தின் டீசரைப் படக்குழு நேற்று (14.10.2021) வெளியிட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த டீசர், ஒரே இரவில் 43 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், யூடியூப் தளத்தில் ட்ரெண்டிங் வரிசையிலும் முதலிடத்தில் தொடர்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்