ADVERTISEMENT

"தனுஷை நினைத்து பெருமைப்படுகிறேன்" - அன்புமணி ராமதாஸ் பாராட்டு

05:51 PM Aug 23, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தனுஷ், ஹாலிவுட்டில் நடித்த 'தி கிரே மேன்’ படம் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. 'அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கியுள்ள இப்படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் எடுக்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் பா.ம.க தலைவர் அன்புமணி 'தி கிரே மேன்’ படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று 'தி கிரே மேன்’ திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தேன். ஹாலிவுட் படத்தில் நடித்ததற்காக தனுஷை நினைத்து பெருமைப்படுகிறேன். தனுஷின் எதிர்கால முயற்சிகளுக்கும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு இன்னும் பல விருதுகளை அவர் கொண்டு வர எனது வாழ்த்துக்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT