தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், 'தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துவருகிறார்.அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் என அறியப்படும் அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கிவருகின்றனர். இப்படத்தில்கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடிகர் தனுஷும் நடித்துவருகிறார்.பிரபல ஓடிடி தளமானநெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்ததகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தி கிரே மேன்' படத்தைஜூலை மாதம் வெளியிடநெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வரும் நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.