Dhanush with his Two Sons LosAngeles

'அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில், தனுஷ் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி கிரே மேன்'. கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் இவர்களுடன் இணைந்து தனுஷும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகியுள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 22-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பு குறிப்பிட்ட சில திரையரங்குகளில் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதனையொட்டி அமெரிக்காவில் உள்ள சில முக்கிய இடங்களில்பிரீமியர்காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று லாஸ் ஏஞ்சல்ஸில்தி கிரே மேன் படத்தின் ப்ரீமியர்காட்சி திரையிடப்படவுள்ளது. அதற்கு நடிகர் தனுஷ் தனது இரு மகன்களுடன் வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisment