ADVERTISEMENT

அல்லு அர்ஜுனின் புகைப்படம் இணையத்தில் வைரல்

04:46 PM Mar 29, 2024 | kavidhasan@nak…

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், 'புஷ்பா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். மேலும் உலக அளவில் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி விரைவில் திரைக்கு வருகிறது. இதை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் அல்லு அர்ஜுனுக்கு துபாயில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அச்சிலை புஷ்பா படத்தில் அவர் செய்யும் போஸ் ஒன்றை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள இந்த சிலையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றுள்ளது. நேற்றைய தினம் அல்லு அர்ஜுன் ஹீரோவாக அறிமுகமாகி 21 ஆண்டுகள் கடந்துள்ளன.

ADVERTISEMENT

இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், மெழுகு சிலை அருகில் அதே போஸுடன் அதே ஆடையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT