allu arjun

Advertisment

‘அல வைகுந்தபுரமலோ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா என்றொரு படத்தில் நடித்து வருகிறார். இதில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியகா ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து இப்படத்தின் ஷூட்டிங் முடங்கியது. தற்போது திரைப்பட ஷூட்டிங்கிற்கு தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து பிரபல நடிகர்கள் தங்கள் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தின் ஷூட்டிங்கை தொடங்க கடந்த மாதம் படக்குழு தீவிரமாக லொக்கேஷன்களை பார்த்து வந்தது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்க இருப்பதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், அதனுடன் ஒரு சிறிய மேக்கிங் வீடியோ போல வெளியிட்டுள்ளது படக்குழு. ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படம், இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட பட்ஜெட்டில் அல்லு அர்ஜூனை வைத்து எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.