/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/7_68.jpg)
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்தது. குறிப்பாக சித்ஸ்ரீராம் பாடிய ஸ்ரீ வள்ளி பாடல் பெரும் ஹிட்டடித்தது. இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறுகையில், "புஷ்பா – தி ரைஸ் என் இசை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் இசையில் எனது புதிய அணுகுமுறையை நம்பியதற்கு சுகுமார் சார், அல்லு அர்ஜுன் மற்றும் மைத்ரி மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி. பின்னணிப் பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் நடிகர்களின் மாயாஜால திரை ஆளுமை எல்லாம் தான் இந்த வெற்றிக்கு ஆதாரமாக அமைந்தது. எனது இசைக்காக அன்பையும் ஆசீர்வாதத்தையும் என் மீது பொழிந்ததற்கு எனது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி, எனது வாழ்க்கை முழுவதும் உங்களிடமிருந்து இதே அளவு ஆதரவைப் பெறுவேன் என்று நம்புகிறேன்" எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)