Rashmika Mandanna

Advertisment

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாகம் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியாகவுள்ள நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா கதாபாத்திரம் தொடர்பான சிறப்பு போஸ்டர் ஒன்றைப் படக்குழு இன்று (29.09.2021) வெளியிட்டுள்ளது. அப்போஸ்டரில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஃபகத் பாசில் கதாபாத்திரம் தொடர்பாக படக்குழு வெளியிட்டிருந்த சிறப்பு போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்தப் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.