ADVERTISEMENT

இரண்டாவது முறையாக அஜித் காயம்!

01:26 PM Nov 20, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பிறகு, அஜித் - எச். வினோத் இணையும் படம் 'வலிமை'. கடந்த வருடம் ஆரமிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.

ADVERTISEMENT

சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பிறகு, ஹைதராபாத்தில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில் அஜித்தும் கலந்துகொண்டு நடித்து வந்தார். இந்தநிலையில், கடந்த வார படப்பிடிப்பின்போது, அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அஜித், தற்போது சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. அஜித்திற்கு ஏற்பட்ட காயம் சிறியதுதான் என்றாலும், 'வலிமை' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 'வலிமை' படப்பிடிப்பில், அஜித்திற்கு காயம் ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நடந்த படப்பிடிப்பின்போதும், அஜித் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT