actress huma qureshi  talk about valimai movie

Advertisment

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 24(நாளை) ஆம் தேதி திரையரங்குகளில்வெளியாகவுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தில் நடித்தது குறித்துஹுமா குரேஷி கூறுகையில், "வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பானதொரு படம், எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குநர் வினோத் சார் என்னுடைய கேரக்டரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட பாத்திரமாக உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு முறையும், ஆக்சன் பிளாக்என்றாலே, நான் உற்சாகமாக இருப்பேன். பொதுவாக, ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தில் ஆண் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே அதில் நடிக்கும் வாய்ப்புகள் இருக்கும், ஆனால் வினோத் சார் பெண் கதாபாத்திரங்களை கணம் மிகுந்த பாத்திரமாக உருவாக்கி திரைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். குறிப்பாக, எனது பாத்திரம் திரையில் நிறைய இடத்தைப் பெற்றிருப்பதைக் காண மிக மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் அஜித் பற்றி அவர் கூறுகையில், ஏற்கனவே “பில்லா 2 படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது, ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. வலிமை படத்திற்கான அழைப்பு வந்தபோது, நான் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவருடன் திரையைப் பகிரப் போகிறேன் என்பது, எனக்கு மிகப் பெரும் உற்சாகத்தை தந்தது. வலிமை படத்தில் அஜித் சாருடன் இணைந்து நான் நிறைய காட்சிகளில் வருகிறேன், எங்கள் காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்றார்.