ajith valimai poster goes viral

Advertisment

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 24 (நாளை) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து படம் வெளியாகவுள்ளதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்கள் போஸ்டர் பேனர்கள் எனத் திரையரங்குகளை அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் வலிமை படம் வெளியாவதை முன்னிட்டு மதுரையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீன அதிபர் ஜி ஜின் பிங் உள்ளிட்ட உலக தலைவர்களுடன் நடிகர் அஜித் வேஷ்டி சட்டை அணிந்து நடந்து வருவது போன்ற புகைப்படம் இடம்பெற்றதுடன் "உலக நாடுகள் எதிர்பார்க்கும் வலிமை, இதுவே சிட்டிசனுக்கு பெருமை" என்ற வாசகத்தோடு ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.