bdsgds

அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகிறது ‘வலிமை’ படம். அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 80% சதவிதம் வரை முடிந்துள்ள நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு தனது நண்பர் குழுவுடன் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார் அஜித். அப்போது சாரநாத், வாரணாசி பகுதிகளுக்கு சென்ற அஜித் தெருவோரத்தில் இருந்த ஒரு சாட் மசாலா கடைக்கு சென்று சாட் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த கடையின் உரிமையாளர் அவரை அடையாளம் கண்டுள்ளார். அப்போது அந்த கடை உரிமையாளரிடம் பனாரசி சாட் உணவு வகைகளை எப்படி தயாரிப்பது என்று அஜித் கேட்டு அவற்றை போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.