ADVERTISEMENT

‘ராட்சசன் 2’ குறித்து இயக்குனரிடம் கேள்வி எழுப்பிய விஷ்ணு! 

10:43 AM Aug 18, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

முண்டாசுப்பட்டி படத்தை தொடர்ந்து ராம்குமார் இயக்கத்தில் உருவான படம் ராட்சசன். இப்படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்த இந்தப் படத்தை ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது.

ADVERTISEMENT

பெரிய விளம்பரங்களின்றி வெளியான இப்படம், அதன்பின்பு பார்வையாளர்களை கவர்ந்து வேர்ட் ஆஃப் மவுத்தின் மூலம் வெற்றிகரமாக ஓடியது. தமிழை அடுத்து தெலுங்கு மொழியில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐ.எம்.டி.பி. தளத்தில் தமிழ் படங்கள் லிஸ்ட்டில் அதிக புள்ளிகளைப் பெற்று ‘ராட்சசன்’ திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. இதனை பலரும் சமூக ஊடகத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பதிவில் இப்படத்திற்கு கண்டிப்பாக இரண்டாம் பாகம் தேவை என்று சொல்லப்பட்டதை நடிகர் விஷ்ணு விஷால் பகிர்ந்து இயக்குனரிடம் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இயக்குனர் ராம்குமார், "போய்கொண்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT